குறள் 684

தூது

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு

arivuru vaaraaindhtha kalviim moonran
serivutaiyaan selka vinaikku


Shuddhananda Bharati

The embassy

Who has these three: good form, sense, lore
Can act as bold ambassador.


GU Pope

The Envoy

Sense, goodly grace, and knowledge exquisite.
Who hath these three for envoy's task is fit.

He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural)sense, an attractive bearing and well-tried learning.


Mu. Varadarajan

இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம்‌, ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம்‌ மூன்றின்‌ பொருத்தம்‌ உடையவன்‌ தூது உரைக்கும்‌ தொழிலுக்குச்‌ செல்லலாம்‌


Parimelalagar

அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க - வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.
விளக்கம்:
[இம்மூன்றும் ஒருவன் பாற் கூடுதல் அரிது ஆலின், 'செறிவுடையான்' என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.]


Manakkudavar

(இதன் பொருள்) அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்க முடையவன் வினைக்குச் செல்க,
(என்றவாறு). அறிவு - இயற்கையறிவு.