குறள் 683

தூது

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு

noolaarul noolvallan aakuthal vaelaarul
vaenri vinaiyuraippaan panpu


Shuddhananda Bharati

The embassy

Savant among savants, he pleads
Before lanced king, triumphant words.


GU Pope

The Envoy

Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.

To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him whospeaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).


Mu. Varadarajan

அரசனிடம்‌ சென்று தன்‌ அரசனுடைய வெற்றிக்குக்‌ காரணமான செயலைப்பற்றித்‌ தூது உரைப்பவன்‌ திறம்‌, நூலறிந்தவருள்‌ நூல்‌ வல்லவனாக விளங்குதல்‌ ஆகும்‌.


Parimelalagar

வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றிதரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லானாதல்.
விளக்கம்:
['கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லானாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதால்.]


Manakkudavar

(இதன் பொருள்) எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்த நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றி யாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம், (எ - று ).