குறள் 682

தூது

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

anparivu aaraaindhtha solvanmai thoothuraippaarkku
inri yamaiyaatha moonru


Shuddhananda Bharati

The embassy

Envoys must bear love for their prince
Knowledge and learned eloquence.


GU Pope

The Envoy

Love, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings.

Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (beforeother sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.


Mu. Varadarajan

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்‌.


Parimelalagar

அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.
விளக்கம்:
[ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே, அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகையார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மை யுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்,
(என்றவாறு) இத்துணையும் தூதரிலக்கணம் கூறியவாறு.