Kural 66
குறள் 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
kulalinithu yaalinithu yenpatham makkal
malalaichsol kaelaa thavar
Shuddhananda Bharati
The flute and lute are sweet they say
Deaf to baby's babble's lay!
GU Pope
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard.
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.
Mu. Varadarajan
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Parimelalagar
குழல் இனிது யாழ் இனிது என்ப-குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்-தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.
விளக்கம்:
('குழல், யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச் சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர் ; கேட்டவர் சொல்லார்,
(என்றவாறு). 6