குறள் 65

புதல்வரைப் பெறுதல்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

makkalmaei theendal udatrkinpam matrruavar
sotrkaetdal inpam sevikku


Shuddhananda Bharati

The wealth of children

Children's touch delights the body
Sweet to ears are their words lovely.


GU Pope

The Obtaining of Sons

To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.


Mu. Varadarajan

மக்களின்‌ உடம்பைத்‌ தொடுதல்‌ உடம்பிற்கு இன்பம்‌ தருவதாகும்‌; அம்‌ மக்களின்‌ மழலைச்‌ சொற்களைக்‌ கேட்டல்‌ செவிக்கு இன்பம்‌ தருவதாகும்‌.


Parimelalagar

உடற்கு இன்பம் மக்கள் மெய் தீண்டல்-ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல்-செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.
விளக்கம்:
('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுபடச் 'சொல்' என்றார். 'தீண்டல்' 'கேட்டல்' என்னும் காரணப் பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம் , அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்,
(என்றவாறு).