Kural 64
குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
amilthinum aatrra inithaetham makkachiirukai
makkachiirukai alaaviya kool
Shuddhananda Bharati
The food is more than nectar sweet
In which one's children hands insert.
GU Pope
Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play'd.
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
Mu. Varadarajan
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்
Parimelalagar
அமிழ்தினும் ஆற்ற இனிதே-சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்-தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.
விளக்கம்:
(சிறுகையான் அளாவலாவது, "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்-நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல்" (புறநா.188).]
Manakkudavar
(இதன் பொருள்) இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிக வினிது; தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்,
(என்றவாறு).