குறள் 63

புதல்வரைப் பெறுதல்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்

thamporul yenpatham makkal avarporul
thamtham vinaiyaan varum


Shuddhananda Bharati

The wealth of children

Children are one's wealth indeed
Their wealth is measured by their deed.


GU Pope

The Obtaining of Sons

'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise.

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.


Mu. Varadarajan

தம்‌ மக்களே தம்முடைய பொருள்கள்‌ என்று அறிஞர்‌ கூறுவர்‌; மக்களாகிய அவர்தம்‌ பொருள்கள்‌ அவரவருடைய வினையின்‌ பயனால்‌ வந்து சேரும்‌.


Parimelalagar

தம் மக்கள் தம் பொருள் என்ப-தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும்-அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான்.
விளக்கம்:
('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம் மக்களை, அம் மக்களுடைய பொருள் தத்தம்முடைய வினையோடே கூடவருதலான்,
(என்றவாறு)