குறள் 62

புதல்வரைப் பெறுதல்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

yelupirappum theeyavai theentaa palipirangkaap
panputai makkat paerin


Shuddhananda Bharati

The wealth of children

No evil comes and no blemish;
Noble sons bring all we wish.


GU Pope

The Obtaining of Sons

Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev'n-fold maze of birth.

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.


Mu. Varadarajan

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்‌ பெற்றால்‌ ஒருவனுக்கு ஏழு பிறவியிலும்‌ தீவினைப்‌ பயனாகிய துன்பங்கள்‌ சென்று சேரா.


Parimelalagar

பெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற-அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களை பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை-யாம் மதிப்பது இல்லை.
விளக்கம்:
('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத் 'துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தில் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா ; ஒருபிறப்பிலே பழியின் கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்,
(என்றவாறு). 2