குறள் 61

புதல்வரைப் பெறுதல்

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

paerumavatrrul yaamarivathu illai arivarindhtha
makkatpaeru alla pira


Shuddhananda Bharati

The wealth of children

The world no higher bliss bestows
Than children virtuous and wise.


GU Pope

The Obtaining of Sons

Of all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain.

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.


Mu. Varadarajan

பெறத்‌ தகுந்த பேறுகளில்‌, அறியவேண்டியவைகளை அறியும்‌ நன்மக்களைப்‌ பெறுவதைத்‌ தவிர மற்றப்‌ பேறுகளை யாம்‌ மதிப்பதில்லை.


Parimelalagar

பெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற-அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களை பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை-யாம் மதிப்பது இல்லை.
விளக்கம்:
('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத் 'துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தில் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

புதல்வரைப் பெறுதலாவது புதல்வரைப் பெற்றதனாலாய பயன் கூறுதல். (இதன் பொருள்) ஒருவன் பெறும் பொருள்கள் அறிவுடைய மக்களைப் பெறுதல் ; பயன்படுவதொழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண் டறிவதில்லை ,
(என்றவாறு).