குறள் 60

வாழ்க்கைத் துணைநலம்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

mangkalam yenpa manaimaachi matrruathan
nankalam nanmakkat paeru


Shuddhananda Bharati

The worth of a wife

An honest wife is home's delight
And children good are jewels abright.


GU Pope

The Goodness of the Help to Domestic Life

The house's 'blessing', men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament.

The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.


Mu. Varadarajan

மனைவியின்‌ நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்‌ என்று கூறுவர்‌; நல்ல மக்களைப்‌ பெறுதலே அதற்கு நல்லணிகலம்‌ என்றும்‌ கூறுவர்‌.


Parimelalagar

மங்கலம் என்ப மனை மாட்சி-ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு-அவை தமக்கு நல்ல அணிகலன் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
விளக்கம்:
('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலன் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்கு அழகென்று சொல்லும், மனையாள் ஒழுக்கமுடையா ளாதலை ; அவ் வழக்கின் மேலே நல்ல அணிகலனென்று சொல்லும், நல்ல புதல் வரைப் பெறுதலை,
(என்றவாறு) 10