Kural 59
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
pukalpurindhtha illilorkku illai ikalvaarmun
yaerupol peedu natai
Shuddhananda Bharati
A cuckold has not the lion-like gait
Before his detractors aright.
GU Pope
The Goodness of the Help to Domestic Life
Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight.
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.
Mu. Varadarajan
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.
Parimelalagar
புகழ் புரிந்த இல் இலேர்க்கு-புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை-தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறுபோல நடக்கும் பெருமித நடை இல்லை.
விளக்கம்:
('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்; தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல் நடக்கும் மேம்பட்ட நடை,
(என்றவாறு). ஏறு நடை - அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.