Kural 639
குறள் 639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்
paluthaennum mandhthiriyin pakkathathul thaevvor
yelupathu koati urum
Shuddhananda Bharati
Seventy crores of foes are better
Than a minister with mind bitter.
GU Pope
The Office of Minister of state
A minister who by king's side plots evil things
Worse woes than countless foemen brings.
Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his)ruin.
Mu. Varadarajan
தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
Parimelalagar
பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின்-பக்கத்திருந்து பிழைப்பு எண்ணும்அமைச்சன் ஒருவனில்; ஓரேழுபதுகோடி தெவ் உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரேழுபதுகோடி பகைவர் உறுவர்.
விளக்கம்:
('எழுபது கோடி' என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலாம் காக்கப்படான என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதல்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
Manakkudavar
(இதன் பொருள்) குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன்ன ருகிலிருப்பவர்,
(என்றவாறு). இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.