குறள் 638

அமைச்சு

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

arikonru ariyaan yeninum uruthi
ulaiyirundhthaan kooral kadan


Shuddhananda Bharati

Ministers

The man in place must tell the facts
Though the ignorant king refutes.


GU Pope

The Office of Minister of state

'Tis duty of the man in place aloud to say
The very truth, though unwise king may cast his words away.

Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.


Mu. Varadarajan

அறிவுறுத்துவாரின்‌ அறிவையும்‌ அழித்துத்‌ தானும்‌ அறியாதவனாக அரசன்‌ இருந்தாலும்‌, அமைச்சன்‌ அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல்‌ கடமையாகும்‌.


Parimelalagar

அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை.
விளக்கம்:
('அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல். 'உழையிருந்தான்' எனப் பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அரசன் அமைச்சன் கூறிய பொருளை யறிக; அவன் ஒன்றறியா னாயினும், அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன்,
(என்றவாறு) இஃது அரசன் கேளா னென்று சொல்லா தொழிதலாகாதென்று கூறிற்று.