Kural 637
குறள் 637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
seyatrkai arindhthak kataiththum ulakaththu
iyatrkai arindhthu seyal
Shuddhananda Bharati
Albeit you know to act from books
Act after knowing world's outlooks.
GU Pope
The Office of Minister of state
Though knowing all that books can teach, ‘tis truest tact
To follow common sense of men in act.
Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.
Mu. Varadarajan
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
Parimelalagar
செயற்கை அறிந்தக் கடைத்தும்-நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க.
விளக்கம்:
('கடைத்தும்' என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க; செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.)
Manakkudavar
(இதன் பொருள்) செயத்தகுவன அறிந்த விடத்தும், அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க,
(என்றவாறு). உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு.