குறள் 635

அமைச்சு

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை

aranarindhthu aanramaindhtha sollaanyenj gnyaanrundh
thiranarindhthaan thaerchith thunai


Shuddhananda Bharati

Ministers

Have him for help who virtue knows
Right wisdom speaks, ever apt in acts.


GU Pope

The Office of Minister of state

The man who virtue knows, has use of wise and pleasant words.
With plans for every season apt, in counsel aid affords.

He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (ofperforming actions).


Mu. Varadarajan

அறத்தை அறிந்தவனாய்‌ அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய்‌, எக்காலத்திலும்‌ செயல்செய்யும்‌ திறன்‌ அறிந்தவனாய்‌ உள்ளவன்‌ ஆராய்ந்து கூறும்‌ துணையாவான்‌.


Parimelalagar

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான்-அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான்-எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை-அவற்குச் சூழ்ச்சித் துணையாம்.
விளக்கம்:
('தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார். 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒரு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும்உ ளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய், எல்லாக் காலத்தினும் செய்யுந்திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித்துணையாய அமைச்சனாவான்,
(என்றவாறு)