Kural 633
குறள் 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு
piriththalum paenik kolalum pirindhthaarp
poruththalum valla thamaichsu
Shuddhananda Bharati
A minister cherishes friends
Divides foes and the parted blends.
GU Pope
The Office of Minister of state
A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.
The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).
Mu. Varadarajan
பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
Parimelalagar
பிரித்தலும்-வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும்- தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக் கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும்-முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு-வல்லவனே அமைச்சனாவான்.
விளக்கம்:
(இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும், பிரித்தலை 'விக்கிரகம்' என்றும்கூறுப.)
Manakkudavar
(இதன் பொருள்) மாற்றாசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத்தி னின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக்கொள்லும் வல்லவன் அமைச்சனாவான்,
(என்றவாறு).