Kural 631
குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு
karuviyum kaalamum seikaiyum seiyum
aruvinaiyum maandathu amaichsu
Shuddhananda Bharati
He is minister who chooses
Right means, time, mode and rare ventures.
GU Pope
The Office of Minister of state
A minister is he who grasps, with wisdom large,
Means, time, work's mode, and functions rare he must discharge.
The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).
Mu. Varadarajan
செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.
Parimelalagar
கருவியும்-வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும்-அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும்-அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு- வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான்.
விளக்கம்:
(கருவிகள்-தானையும் பொருளும். காலம்-அது தொடங்கும் காலம். 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தனையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.)
Manakkudavar
அமைச்சாவது அமைச்சர் செய்யுந் திறங்கூறுதல். அஃதாவது அது கூறிய அதிகாரம் பத்தினும் முற்பட அமைச்சர்க்கு இன்றியமையாக் குணங்க ளெல்லாம் ஓரதிகாரத்தானும், வாத மண்டலத்திலிருந்து செய்யவேண்டுவன நான்கதிகாரத்தானும், மறு-மண்டலத்திற்குப் போம் தூதர் இலக்கணம் ஓதிகாரத் தானும், அவர் செய்யும் திறன் நான்கதிகாரத்தானுங் கூறினாரென்று சொல்லப் படும். மேல் அரசர் செய்யுந் திறன் நான்கினுள் ஒரு வினை செய்து முடிக்குங்கால் அமைச்சு வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சியைப் பட்டவன் அமைச்சனாவான்,
(என்றவாறு). செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை - குதிரை - முதலிய படை ; காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம் ; செய்தலாவது மடியின்றிச் செய்தல்.