Kural 630
குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
innaamai inpam yenakkolin aakundhthan
aakundhthan onnaar vilaiyuchiirappu
Shuddhananda Bharati
His glory is esteemed by foes
Who sees weal in wanton woes!
GU Pope
Who pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire.
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
Mu. Varadarajan
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
Parimelalagar
இன்னாமை இன்பம் எனக்கொளின்-ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும்-அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய் உயர்ச்சி உண்டாம்.
விளக்கம்:
(துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின்; அதனை மாறுபடக்கொள்ளவே, அதற்கு அழிவு இன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தேவிடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) இன்னாமையை இன்பம் போலக் கொள்வனாயின், அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம்,
(என்றவாறு). மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின், அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு. அரசியல் முற்றிற்று.