குறள் 629

இடுக்கணழியாமை

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

inpaththul inpam vilaiyaathaan thunpaththul
thunpam uruthal ilan


Shuddhananda Bharati

Hope in mishap

In joy to joy who is not bound
In grief he grieves not dual round!


GU Pope

Hopefulness in Trouble

Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.

He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.


Mu. Varadarajan

இன்பம்‌ வந்த காலத்தில்‌ அந்த இன்பத்தை விரும்பிப்‌ போற்றாதவன்‌, துன்பம்‌ வந்த காலத்தில்‌ அந்தத்‌ துன்பத்தை அடைவதும்‌ இல்லை.


Parimelalagar

இன்பத்துள் இன்பம் விழையாதான்-வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்-துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான்.
விளக்கம்:
(துன்பம்-முயற்சியான் வரும் இடுக்கண், இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)


Manakkudavar

(இதன் பொருள்) இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந் துன்பம் நுகரு மிடத்து வருத்தமுறுதலிலன்,
(என்றவாறு). இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வரும் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.