குறள் 628

இடுக்கணழியாமை

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

inpam vilaiyaan idumpai iyalpaenpaan
thunpam uruthal ilan


Shuddhananda Bharati

Hope in mishap

Who seek not joy, deem grief norm
By sorrows do not come to harm.


GU Pope

Hopefulness in Trouble

He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.

That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).


Mu. Varadarajan

இன்பமானதை விரும்பாதவனாய்த்‌ துன்பம்‌ இயற்கையானது என்று தெளிந்திருப்பவன்‌ துன்பம்‌ வந்தபோது துன்ப முறுவது இல்லை.


Parimelalagar

இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன்-தன் முயற்சியால் துன்பமுறான்.
விளக்கம்:
(இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின், இவ்விரண்டுஞ் செய்தானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறு தலை இயல்பாகக் கொள்ளும் வன், துன்ப முறுதல் இல்லை,
(என்றவாறு). இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல் வேண்டு மென்றது.