Kural 624
குறள் 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
maduththavaa yaellaam pakadannaan utrra
idukkan idarppaadu utaiththu
Shuddhananda Bharati
Who pulls like bulls patiently on
Causes grief to grieve anon.
GU Pope
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.
Troubles will vanish (1.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
Mu. Varadarajan
தடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.
Parimelalagar
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்-விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து-வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.
விளக்கம்:
('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. ''பகடு மருங்கு ஒன்றியும் மூக்கு ஊன்றியும் தான் தகவழ்ந்தும்' [சீவக. முத்தி. 186] அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார். 'பகடு அன்னான்' என்றார்.)
Manakkudavar
(இதன் பொருள்) இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடு போலத் தளர்வின் றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து, (எ - று. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடு மென்றது.