குறள் 604

மடியின்மை

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

kutimatindhthu kutrram paerukum matimatindhthu
maanda ugnyatrri lavarkku


Shuddhananda Bharati

Freedom from sloth

Who strive not high, sunk deep in sloth
Ruin their house by evil growth.


GU Pope

Unsluggishness

His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.

Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way tolaziness, and put forth no dignified exertions.


Mu. Varadarajan

சோம்பலில்‌ அகப்பட்டுச்‌ சிறந்த முயற்சி இல்லாதவராய்‌ வாழ்கின்றவர்க்குக்‌ குடியின்‌ பெருமை அழிந்து குற்றம்‌ பெருகும்‌.


Parimelalagar

மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின் கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும்.
விளக்கம்:
('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு, (எ - று ) இது பிறரால் இகழப்படுவ ரென்றது.