குறள் 603

மடியின்மை

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

matimatik kondolukum paethai pirandhtha
kutimatiyum thanninum mundhthu


Shuddhananda Bharati

Freedom from sloth

The fool who fosters sluggishness
Before he dies ruins his house.


GU Pope

Unsluggishness

Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive lazinesswill perish, even before he is dead.


Mu. Varadarajan

அழிக்கும்‌ இயல்புடைய சோம்பலைத்‌ தன்னிடம்‌ கொண்டு நடக்கும்‌ அறிவில்லாதவன்‌ பிறந்த குடி, அவனுக்கு முன்‌ அழிந்துவிடும்‌.


Parimelalagar

மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத் தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும்.
விளக்கம்:
(அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின், 'பேதை' என்றும், அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து, ஒழுகாநின்ற அறிவிலி பிறந்த குடி தனக்கு முன்பே கெடும்,
(என்றவாறு). சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப் பட்டது.