Kural 601
குறள் 601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
kutiyaennum kunraa vilakkam matiyaennum
maakoora maaindhthu kedum
Shuddhananda Bharati
Quenchless lamp of ancestry goes
When foul idleness encloses.
GU Pope
Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light.
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.
Mu. Varadarajan
ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
Parimelalagar
குடி என்னும் குன்றா
விளக்கம்:
-தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும்-ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப் போம்.
விளக்கம்:
(உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா
விளக்கம்:
' என்றும், தாமத குணத்தான் வருதலின் 'மடியை' மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ்விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்' என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லை யாதல்.)
Manakkudavar
மடியின்மையாவது சோம்பலில்லாது செய்யுங்காரியம். உயர்வு நினைத்தா லும் அதனைச் செய்து முடிக்குங்கால், சோம்பாமை வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடி யென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும்,
(என்றவாறு). முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.