குறள் 585

ஒற்றாடல்

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

kataaa uruvodu kannanjsaathu yaandum
ukaaamai vallathae otrru


Shuddhananda Bharati

Espionage

Fearless gaze, suspectless guise
Guarding secrets mark the spies.


GU Pope

Detectives

Of unsuspected mien and all-unfearing eyes,
Who let no secret out, are trusty spies.

A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds ofothers), who fears no man's face, and who never reveals (his purpose).


Mu. Varadarajan

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல்‌ எவ்விடத்திலும்‌ மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல்‌, இருக்கவல்லவனே ஒற்றன்‌ ஆவன்‌.


Parimelalagar

கடாஅ உருவொடு-ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது-அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.
விளக்கம்:
('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.)


Manakkudavar

(இதன் பொருள்) வினாவப்படாத வடிவோடேகூடி, கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்த பொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்க வல்லவன் ஒற்ற னாவன்,
(என்றவாறு).