Kural 583
குறள் 583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்
otrrinaan otrrip porulthaeriyaa mannavan
kotrrang kolakkidandhthathu il
Shuddhananda Bharati
Conquests are not for the monarch
Who cares not for the Spy's remark.
GU Pope
By spies who spies, not weighing things they bring,
Nothing can victory give to that unwary king.
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.
Mu. Varadarajan
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.
Parimelalagar
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்-ஒற்றினானே எல்லார் கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல்-வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.
விளக்கம்:
(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின், 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான், அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை,
(என்றவாறு). இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.