குறள் 580

கண்ணோட்டம்

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

paeyakkandum nanjsun damaivar nayaththakka
naakarikam vaendu pavar


Shuddhananda Bharati

Benign looks

Men of graceful courtesy
Take hemlock and look cheerfully.


GU Pope

Benignity

They drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all-esteemed courtesy.

Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.


Mu. Varadarajan

யாவராலும்‌ விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர்‌, பழகியவர்‌ தமக்கு நஞ்சு இடக்கண்டும்‌ அதை உண்டு அமைவர்‌.


Parimelalagar

நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர்-பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின், அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுமவர்.
விளக்கம்:
(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல்" முந்தை இருந்த நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்" (நற். 355) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புவார்,
(என்றவாறு). நாகரிகம் - அறம் பொருள் இன்பத்தின்கண் நற்குணங்கள் பலவும் உடைமை