குறள் 579

கண்ணோட்டம்

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

oruththaatrrum panpinaar kannumkan notip
poruththaatrrum panpae thalai


Shuddhananda Bharati

Benign looks

To be benign and bear with foes
Who vex us is true virtue's phase.


GU Pope

Benignity

To smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace.

Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of alldispositions.


Mu. Varadarajan

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும்‌ கண்ணோட்டம்‌ செய்து, (அவர்‌ செய்த குற்றத்தைப்‌) பொறுத்துக்‌ காக்கும்‌ பண்பே சிறந்தது.


Parimelalagar

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும்- தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை- கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.
விளக்கம்:
('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம். 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோ டிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்,
(என்றவாறு).