குறள் 578

கண்ணோட்டம்

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு

karumachiithaiyaamal kannoda vallaarkku urimai
urimai utaiththiv vulaku


Shuddhananda Bharati

Benign looks

Who gracious are but dutiful
Have right for this earth beautiful.


GU Pope

Benignity

Who can benignant smile, yet leave no work undone;
By them as very own may all the earth be won.

The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs,(administration of justice).


Mu. Varadarajan

தம்‌ தம்‌ கடமையாகிய தொழில்‌ கெடாமல்‌ கண்ணோட்டம்‌ உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம்‌ உரிமை உடையது.


Parimelalagar

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு-முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு- உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.
விளக்கம்:
(தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைதல், மேல் "ஓர்ந்து கண்ணோடாது" (குறள் 541) என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ் வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தங்கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோடவல்லவர்க்கு , இவ் வுலகம் உரிமையாதலை உடையது,
(என்றவாறு) இது நற்குணமாவது கண்ணோட்டமாயினும், அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோட வேண்டுமென்று கூறிற்று.