குறள் 577

கண்ணோட்டம்

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்

kannotdam illavar kannilar kannutaiyaar
kannotdam inmaiyum il


Shuddhananda Bharati

Benign looks

Ungracious men lack real eyes
Men of real eyes show benign grace.


GU Pope

Benignity

Eyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign.

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.


Mu. Varadarajan

கண்ணோட்டம்‌ இல்லாத மக்கள்‌ கண்‌ இல்லாதவரே ஆவர்‌. கண்‌ உடைய மக்கள்‌ கண்ணோட்டம்‌ இல்லாதிருத்தலும்‌ இல்லை.


Parimelalagar

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்-கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்-கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.
விளக்கம்:
(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். 'உம்மை' இறந்தது தழீஇய எச்சஉம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே; கண்ணுடையார் கண் ணோட்டமிலராதலும் இல்லை,
(என்றவாறு).