குறள் 576

கண்ணோட்டம்

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்

manno tiyaindhtha maraththanaiyar kanno
tiyaindhthukan notaa thavar


Shuddhananda Bharati

Benign looks

Like trees on inert earth they grow
Who don't eye to eye kindness show.


GU Pope

Benignity

Whose eyes ‘neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they.

They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).


Mu. Varadarajan

கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும்‌ கண்ணோட்டம்‌ இல்லாதவர்‌, (கண்‌ இருந்தும்‌ காணாத) மரத்தினைப்‌ போன்றவர்‌.


Parimelalagar

கண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணொடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
விளக்கம்:
('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது, மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், "மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய்" (புறத்திரட்டு 1555 முத்தொள்.) என்பதனானும் அறிக.


Manakkudavar

(இதன் பொருள்) சுதைமண்ணோடு கூடச் செய்த மாப்பாவையோடு ஒப்பார்; ஒருவன் கண்ணோடு தங்கண் கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.