குறள் 575

கண்ணோட்டம்

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும

kannitrku anikalam kannotdam akhthinrael
punnaenru unarap paduma


Shuddhananda Bharati

Benign looks

Kind looks are jewels for eyes to wear
Without them they are felt as sore.


GU Pope

Benignity

Benignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face.

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to bemerely two sores.


Mu. Varadarajan

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம்‌ என்னும்‌ பண்பே; அஃது இல்லையானால்‌ புண்‌ என்று உணரப்படும்‌.


Parimelalagar

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்-ஒருவன் கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக் கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையாரால் புண் என்று அறியப்படும்.
விளக்கம்:
(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்ற கண்ணின் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டம் முடைமை; அஃ தில்லையாயின், அவை புண்ணென்றறியப்படும்,
(என்றவாறு). இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.