குறள் 574

கண்ணோட்டம்

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்

ulapol mukaththaevan seiyum alavinaal
kannotdam illaatha kan


Shuddhananda Bharati

Benign looks

Except that they are on the face
What for are eyes sans measured grace.


GU Pope

Benignity

The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.

Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulatedkindness?


Mu. Varadarajan

தக்க அளவிற்குக்‌ கண்ணோட்டம்‌ இல்லாத கண்கள்‌ முகத்தில்‌ உள்ளவைபோல்‌ தோன்றுதல்‌ அல்லாமல்‌ வேறு என்ன பயன்‌ செய்யும்‌?


Parimelalagar

முகத்து உளபோல் எவன் செய்யும்-கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்-அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.
விளக்கம்:
('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண் கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்?
(என்றவாறு). அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.