குறள் 57

வாழ்க்கைத் துணைநலம்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

siraikaakkum kaappaevan seiyum makalir
niraikaakkum kaappae thalai


Shuddhananda Bharati

The worth of a wife

Of what avail are watch and ward?
Their purity is women's guard.


GU Pope

The Goodness of the Help to Domestic Life

Of what avail is watch and ward?
Honour's woman's safest guard.

What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.


Mu. Varadarajan

மகளிரைக்‌ காவல்‌ வைத்துக்‌ காக்கும்‌ காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்‌? அவர்கள்‌ நிறை என்னும்‌ பண்பால்‌ தம்மைத்‌ தாம்‌ காக்கும்‌ காப்பே சிறந்தது.


Parimelalagar

மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்-மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை-அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல்.
விளக்கம்:
((சிறை: மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை:நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்,
(என்றவாறு).