குறள் 56

வாழ்க்கைத் துணைநலம்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

thatrkaaththuth thatrkontaatr paenith thakaisaanra
sotrkaaththuch chorvilaal paen


Shuddhananda Bharati

The worth of a wife

The good wife guards herself from blame,
She tends her spouse and brings him fame.


GU Pope

The Goodness of the Help to Domestic Life

Who guards herself, for husband's comfort cares, her household's fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.

She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.


Mu. Varadarajan

கற்புநெறியில்‌ தன்னையும்‌ காத்துக்கொண்டு, தன்‌ கணவனையும்‌ காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும்‌ காத்து, உறுதி தளராமல்‌ வாழ்கின்றவளே பெண்‌.


Parimelalagar

தன் காத்துத் தன் கொண்டான் பேணி-கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகை சான்ற சொல் காத்து-இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண்-மேற் சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள்.
விளக்கம்:
(தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னையுங் காத்துத், தன்னைக் கொண்ட கணவனையும் பேணி, நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மையுடையவளே பெண் ணென்று சொல்லப்படுவள்,
(என்றவாறு).