குறள் 55

வாழ்க்கைத் துணைநலம்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

thaeivam tholaaal kolunan tholuthaeluvaal
paeiyaenap paeiyum malai


Shuddhananda Bharati

The worth of a wife

Her spouse before God who adores,
Is like rain that at request pours.


GU Pope

The Goodness of the Help to Domestic Life

No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word!

If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.


Mu. Varadarajan

வேறு தெய்வம்‌ தொழாதவளாய்த்‌ தன்‌ கணவனையே தெய்வமாகக்‌ கொண்டு தொழுது துயிலெழுகின்றவள்‌ பெய்‌ என்றால்‌ மழை பெய்யும்‌!


Parimelalagar

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என-பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்; பெய் எனப் பெய்யும் மழை-'பெய்' என்று சொல்ல, மழை பெய்யும்.
விளக்கம்:
(தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழா நின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வ முந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய் யென்று சொல்ல மழை பெய்யும்,
(என்றவாறு). எழுதல் - உறங்கி எழுதல்.