குறள் 54

வாழ்க்கைத் துணைநலம்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

paennin paerundhthakka yaavula katrpaennum
thinmaiun taakap paerin


Shuddhananda Bharati

The worth of a wife

What greater fortune is for men
Than a constant chaste woman?


GU Pope

The Goodness of the Help to Domestic Life

If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain?

What is more excellent than a wife, if she possess the stability of chastity ?


Mu. Varadarajan

இல்வாழ்க்கையில்‌ கற்பு என்னும்‌ உறுதிநிலை இருக்கப்‌ பெற்றால்‌, பெண்ணைவிடப்‌ பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?


Parimelalagar

பெண்ணின் பெருந்தக்க யாஉள ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்-அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.
விளக்கம்:
(கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின், 'யா உள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள்? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்,
(என்றவாறு).