குறள் 53

வாழ்க்கைத் துணைநலம்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

illathaen illaval maanpaanaal ullathaen
illaval maanaak katai


Shuddhananda Bharati

The worth of a wife

What is rare when wife is good.
What can be there when she is bad?


GU Pope

The Goodness of the Help to Domestic Life

There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonoured dwells.

If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?


Mu. Varadarajan

மனைவி நற்பண்பு உடையவளானால்‌ வாழ்க்கையில்‌ இல்லாதது என்ன? அவள்‌ நற்பண்பு இல்லாதவளானால்‌ வாழ்க்கையில்‌ இருப்பது என்ன?


Parimelalagar

இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என்-அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது?
விளக்கம்:
('மாண்பு' எனக் குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால், எல்லா மிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால், எல்லா முடையானாயினும் உண்டானது யாது?
(என்றவாறு).