Kural 528
குறள் 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
pothunokkaan vaendhthan varisaiyaa nokkin
athunokki vaalvaar palar
Shuddhananda Bharati
From public gaze when kings perceive
Each one's merits so many thrive.
GU Pope
Where king regards not all alike, but each in his degree,
"Neath such discerning rule many dwell happily.
Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that helooks on each man according to his merit.
Mu. Varadarajan
அரசன் எல்லாரையும் பொதுவாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால் அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
Parimelalagar
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின் அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
விளக்கம்:
[உயர்ந்தார் நீக்குதல் நோக்கியபோது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார். இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.]
Manakkudavar
(இதன் பொருள்) அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின், அப்பார்வை நோக்கி, அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்,
(என்றவாறு). இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.