குறள் 527

சுற்றந்தழால்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

kaakkai karavaa karaindhthunnum aakkamum
annanee raarkkae ula


Shuddhananda Bharati

Cherishing kinsmen

The crows hide not; thy call and eat
Welfare abides a man of heart.


GU Pope

Cherishing one's Kindred

The crows conceal not, call their friends to come, then eat;
Increase of good such worthy ones shall meet.

The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eatit; wealth will be with those who show a similar disposition (towards their relatives).


Mu. Varadarajan

காக்கை (தனக்குக்‌ கிடைத்ததை) மறைத்துவைக்காமல்‌ சுற்றத்தைக்‌ கூவி அழைத்து உண்ணும்‌; ஆக்கமும்‌ அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.


Parimelalagar

காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணா நிற்கும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.
விளக்கம்:
[அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின. எச்ச உம்மையான் அறமும் இன்பமுமே அன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும்.' அப்பெற்றித்தாய இயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.]


Manakkudavar

(இதன் பொருள்) காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்ற மெல்லாவற்றையும் அழைத்து உண்ணும்; அது போல், செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது,
(என்றவாறு). இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறங் கூறின்.