Kural 526
குறள் 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்
paerungkotaiyaan paenaan vaekuli avanin
marungkutaiyaar maanilaththu il
Shuddhananda Bharati
Large giver and wrathless man
Commands on earth countless kinsmen.
GU Pope
Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains.
No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, anddoes not give way to anger.
Mu. Varadarajan
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
Parimelalagar
பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின்; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.
விளக்கம்:
[மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல், விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று,' என்று அளவிறந்து செய்யாமை.]
Manakkudavar
(இதன் பொருள்) மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின், அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை,
(என்றவாறு). இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின், துணையுடையானா மென்றது.