Kural 525
குறள் 525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
koduththalum insolum aatrrin adukkiya
sutrraththaal sutrrap padum
Shuddhananda Bharati
Loving words and liberal hand
Encircle kith and kin around.
GU Pope
Who knows the use of pleasant words, and liberal gifts can give,
Connections, heaps of them, surrounding him shall live.
He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.
Mu. Varadarajan
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.
Parimelalagar
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின்; அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும் - தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.
விளக்கம்:
[இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது-சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.]
Manakkudavar
(இதன் பொருள்) வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வ னாயின், தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப் படுவன்,
(என்றவாறு). இஃது ஒழுகுந் திறங் கூறிற்று.