Kural 524
குறள் 524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
sutrraththaal sutrrap padaolukal selvandhthaan
paetrraththaal paetrra payan
Shuddhananda Bharati
The fruit of growing wealth is gained
When kith and kin are happy found.
GU Pope
The profit gained by wealth's increase,
Is living compassed round by relatives in peace.
To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.
Mu. Varadarajan
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.
Parimelalagar
செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது; சுற்றத்தால்தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.
விளக்கம்:
['பெற்ற' என்பதனுள் அகரமும் 'அதனான்' என்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ்வொழுக்குப் பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப் பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால் செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பது கூறப்பட்டது.]
Manakkudavar
(இதன் பொருள்) சுற்றத்தாராலே சூழப்பட்ட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்ற வதனால் உண்டான பயன்,
(என்றவாறு) இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது.