குறள் 523

சுற்றந்தழால்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று

alavalaa villaathaan vaalkkai kulavalaak
koatinri neerniraindh thatrru


Shuddhananda Bharati

Cherishing kinsmen

A kinless wealth is like a tank
Which overflows without a bank.


GU Pope

Cherishing one's Kindred

His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.

The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.


Mu. Varadarajan

சுற்றத்தாரோடு மனம்‌ கலந்து பழகும்‌ தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல்‌ நீர்‌ நிறைந்தாற்‌ போன்றது.


Parimelalagar

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதவன் வாழ்க்கை; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்தற்று - குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும்.
விளக்கம்:
[சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகு பெயர். 'வாழ்க்கை' எனறதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை, 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான் செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை , குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்,
(என்றவாறு). இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.