Kural 522
குறள் 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்
virupparaach sutrram iyaiyin arupparaa
aakkam palavum tharum
Shuddhananda Bharati
The gift of loving Kins bestows
Fadeless fortune's fresh flowers.
GU Pope
The gift of kin's unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows.
If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealth.
Mu. Varadarajan
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
Parimelalagar
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பும் அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும்-அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
விளக்கம்:
[உட்பகையின் நீக்குதற்கு 'விருப்பு அறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு 'அருப்பு அறா ஆக்கம்' என்றும் விசேடித்தார். தொடை நோக்கி விகாரமாயிற்று. 'இயையின், என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர், பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேன் கிளைக்கும் என்பது கருத்து.]
Manakkudavar
(இதன் பொருள்) அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகுமாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்,
(என்றவாறு).