குறள் 521

சுற்றந்தழால்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள

patrratrra kannum palaimaipaa raatduthal
sutrraththaar kannae ula


Shuddhananda Bharati

Cherishing kinsmen

Let fortunes go; yet kinsmen know
The old accustomed love to show.


GU Pope

Cherishing one's Kindred

When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.

Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed(kindness).


Mu. Varadarajan

ஒருவன்‌ வறியவனான காலத்திலும்‌ அவனுக்கும்‌ தமக்கும்‌ இருந்த பழைய உறவைப்‌ பாராட்டிப்‌ பேசும்‌ பண்புகள்‌ சுற்றத்தாரிடம்‌ உண்டு.


Parimelalagar

பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாயவழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள்; சுற்றத்தார்கண்ணே உள-சுற்றத்தார் மாட்டே உள ஆவன.
விளக்கம்:
[சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப் படாமை விளக்கி நின்றது. பழைமை: பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின், ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.]


Manakkudavar

சுற்றந்தழாலாவது அரசன் தன்கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத் தல். மேல் அமாத்தியர்மாட்டு அரசன் ஒழுகுந் திறங் கூறினாராதலின், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்)பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடா தொழுகுதல், சுற்றத்தார்மாட்டே யுள்வாம், (எ - று ) இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.