குறள் 520

தெரிந்துவினையாடல்

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

naatohrum naaduka mannan vinaiseivaan
koataamai koataa thulaku


Shuddhananda Bharati

Testing and entrusting

Worker straight the world is straight
The king must look to this aright.


GU Pope

Selection and Employment

Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.


Mu. Varadarajan

தொழில்‌ செய்கின்றவன்‌ கோணாதிருக்கும்‌ வரையில்‌ உலகம்‌ கெடாது; ஆகையால்‌ மன்னன்‌ நாள்தோறும்‌ அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்‌.


Parimelalagar

வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை) நாள்தோறும் ஆராய்க.
விளக்கம்:
[அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம்; அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வை யிலே நிற்கும்; ஆதலான், அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண் டும்,
(என்றவாறு). இது வினை செய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.