குறள் 519

தெரிந்துவினையாடல்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு

vinaikkan vinaiyutaiyaan kaenmaivae raaka
ninaippaanai neengkum thiru


Shuddhananda Bharati

Testing and entrusting

Who do duty for duty's sake
Doubt them; and fortune departs quick.


GU Pope

Selection and Employment

Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.

Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.


Mu. Varadarajan

மேற்கொண்ட தொழிலில்‌ எப்போதும்‌ முயற்சி உடையவனின்‌ உறவைத்‌ தவறாக நினைக்கும்‌ தலைவனை விட்டுச்‌ செல்வம்‌ நீங்கும்‌.


Parimelalagar

வினைக்கண் வினை உடையான் கேண்மை-எப்பொழுதும் தன் வினையின் கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற் கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு தீங்கும்.
விளக்கம்:
[கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாம் நில்லாது கேளிர் செய்யும் உரிமை எல்லாம் செய்தொழுகுதல் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக் கருதுமாயின், பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம். ஆகவே, தன் செல்வம் கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானை ஆளும் திறம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்,
(என்றவாறு).