குறள் 518

தெரிந்துவினையாடல்

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

vinaikkurimai naatiya pinrai avanai
athatrkuriya naakach seyal


Shuddhananda Bharati

Testing and entrusting

His fitness for the duty scan
Leave him to do the best he can.


GU Pope

Selection and Employment

As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.


Mu. Varadarajan

ஒருவன்‌ ஒரு தொழிலைச்‌ செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத்‌ தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்‌.


Parimelalagar

வினைக்கு உரிமை நாடிய பின்றை-ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்;அவனை அதற்கு உரியனாகச் செயல்-பின் அவனை அதற்குரியனாமாறு உயரச் செய்க.
விளக்கம்:
[உயரச் செய்தலாவது: அதனைத் தானே செய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.]


Manakkudavar

(இதன் பொருள்) இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக ,
(என்றவாறு). இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது கூறிற்று.