குறள் 517

தெரிந்துவினையாடல்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

ithanai ithanaal ivanmutikkum yenraaindhthu
athanai avankan vidal


Shuddhananda Bharati

Testing and entrusting

This work, by this, this man can do
Like this entrust the duty due.


GU Pope

Selection and Employment

'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand.

After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.


Mu. Varadarajan

இந்தத்‌ தொழிலை இக்‌ கருவியால்‌ இன்னவன்‌ முடிப்பான்‌ என்று ஆராய்ந்த பிறகு அத்‌ தொழிலை அவனிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.


Parimelalagar

இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ் வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து; அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. [கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.]
விளக்கம்:
[கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.]


Manakkudavar

(இதன் பொருள்) இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவ னென்று ஆராய்ந்து, பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக,
(என்றவாறு). இது பெரும்பான்மையுஞ் சேனாபதியை நோக்கிக் கூறிற்று.